செய்தி விளையாட்டு

இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்டில் இந்திய தோல்வியடைந்த நிலையில், 2வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கி உள்ளது. மேலும் 2025ம் ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பதையும் மனதில் வைத்துள்ளது.

இதற்கு முன்பு நடந்த 2 சுழற்சிகளிலும் இந்தியா இறுதி போட்டிக்கு சென்று தோல்வியடைந்தது. இந்நிலையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு நுழைவதில் இந்தியாவிற்கு புதிய சிக்கல் வந்துள்ளது.

பங்களாதேஷ்க்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, தென்னாப்பிரிக்கா அணியும் இந்த போட்டியில் இணைந்துள்ளது. அவர்களுக்கு இன்னும் ஒரு அவே போட்டி தான் உள்ளது, அதே சமயம் 5 டெஸ்ட் போட்டிகள் சொந்த மண்ணில் நடைபெற உள்ளது.

சொந்த மண்ணில் அவர்களை தோற்கடிப்பது கடினம் என்பதால் இந்த போட்டிகள் அனைத்திலும் தென்னாபிரிக்கா வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் வெற்றி பெற்றால் 69.44 PCT புள்ளிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இடம் பெறுவார்கள்.

இந்திய அணி தகுதி பெற நியூசிலாந்து தொடரை வெல்ல வேண்டும். மேலும் ஆஸ்திரேலியாவில் குறைந்தது 2 டெஸ்டில் வெற்றி பெற வேண்டும். இதனை செய்ய தவறினால் ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு எளிதாக தகுதி பெற்றுவிடும்.

(Visited 60 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி