அரசியல் பொழுதுபோக்கு

வியக்க வைக்கும் விஜய்யின் முதல் மாநாடு… அஜித் வருவாரா? லீக்கான படங்கள்…

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மருத்துவர் அணி, தொழில்நுட்ப அணி என ஒவ்வொரு அணிகளாக பிரித்து வேலைகள் நடைபெற்று வருகிறது.

எந்தவித அசம்பாவிதமும் நடைபெற கூடாது என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு மிகவும் இந்த நிமிஷம் வரைக்கும் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.ஒரு பக்கம் வானிலை ஆய்வு மையம் இந்த இடத்தில் மழை,புயல் என பீதியை கிளப்பினாலும் அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் மாநாட்டு வேலை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.எப்படியாவது மழை வந்து மாநாட்டை கெடுத்துவிட வேண்டும் என்று பலர் பிரார்த்தனை செய்து வந்தாலும் மாநாட்டு ஏற்பாடு படு ஜோராக நடந்து வருகிறது.

இதற்கு முன் விக்ரவாண்டியில் திமுக ஒரு மாநாடு நடந்து இருக்கு, ஆனால், அதற்கு வந்தது எல்லாம் ஒரு கூட்டமா என்று சொல்லும் அளவிற்கு இந்த மாநாட்டில் கூட்டம் கூட உள்ளது. இந்த மாநாட்டிற்காக கன்னியாகுமரியில் இருந்து விக்ரவாண்டிக்கு ஒருவர் நடந்தே வந்து கொண்டு இருக்கிறார். இது யாரும் செய்ய முடியாத ஒன்று. இதற்கு காரணம் விஜய் ஒரு உச்ச நடிகர் என்பதும், மக்களுக்காக சினிமாவை விட்டு வருவதும் தான் என்றும் சொல்லப்படுகிறது.

மாநாடு நடக்க இன்னும் நாலு நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் மாநாட்டுக்கான அழைப்பிதழ் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை மாநாட்டுக்கு அழைப்பிதழ் இல்லாமே நடக்குமா என்று தெரியவில்லை.

மாநாட்டில் எந்தவிதமான குறையும் வந்துவிடக்கூடாது என்று உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு, தொண்டர்கள் பாதுகாப்பாக அமர இருக்கை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சாப்பாடு, ஆம்புலன்ஸ், எல்ஈடி பல்பு என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டிற்கு 650 அடி நீளம் 50 அடி உயரத்தில் கோட்டை போல் பிரம்மாண்ட செட் போடப்பட்டு வருகிறது. மாநாட்டு மட்டும் கிட்டத்தட்ட பல கோடி செலவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் விஜய்யின் சொந்த பணம் என்பது தான் மிக முக்கியமான விஷயம். பல கட்சிகள் மாநாடு நடத்தினால், கட்சி பணத்தில் தான் நடத்துவார்கள். ஆனால், விஜய் தான் சம்பாதித்த பணத்தில் இந்த மாநாட்டை நடத்துகிறார்.இது உண்மையில் பாராட்டக்கூடிய ஒன்று.

இந்த மாநாட்டில் சிறப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரியமான மயிலாட்டம், ஒயிட்டம், கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக அனைவரின் நட்பையும் பெற வேண்டும் என்பதை விஜய் தெளிவாக புரிந்து வைத்து இருக்கிறார்.

அதன் காரணமாக அஜித்திடம் இருந்து ஒரு வாழ்த்து கடிதத்தை வாங்கி அதை மாநாட்டு மேடையில் படிக்கலாம் என்கிற ஒரு தகவல் இருக்கு. அது உண்மையாக இருக்கும் என்றால், அது மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறும்.

ஏன் என்றால், அஜித்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். பல ஆண்டு காலமாக அஜித், விஜய் ரசிகர்கள் சண்டை போட்டு வருகிறார்கள். அந்த சண்டையை முதலில் நிறுத்த வேண்டும் என்று விஜய் நினைப்பதால், அஜித்திடம் இரு ஒரு வாழ்த்தை வாங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அது என்ன என்று விரைவில் தெரிந்துவிடும் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
Skip to content