ஹொங்கொங்கில் குரங்குகளுக்கு ஆபத்தாக மாறியுள்ள பாக்டீரியா தொற்று
ஹொங்கொங்கில் திடீரென 11 குரங்குகள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரியல் பூங்கா ஒன்றில் பாக்டீரியா தொற்று காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்படி உயிரிழந்த குரங்குகளின் உறுப்புகளில் மெலியோடோசிஸ் என்ற பாக்டீரியா இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த பாக்டீரியா விலங்குகள் மற்றும் மனிதர்களைப் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்குகள் உயிரிழந்ததால் ஹொங்கொங் உயிரியல் பூங்காவிலுள்ள குரங்குகள் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)