தொலைபேசிக்காக பாறைகளின் இடையில் சிக்கிய பெண் : அவுஸ்ரேலியாவில் சம்பவம்!
தொலைந்த போனை மீட்டெடுக்கும் முயற்சியில், அரை டன் எடையுள்ள இரண்டு கற்பாறைகளுக்கு இடையில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று மீட்டர் பள்ளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாடில்டா காம்ப்பெல் என்ற பெண் தனது தொலைபேசியை தவறவிட்ட பிறகு அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவருடைய நண்பர்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டுபு குழுவினர் 500 கிலோ கொண்ட பாறையை அகற்றி அவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
(Visited 47 times, 1 visits today)





