கொழும்பு உட்பட சில பகுதிகளில் நீர் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கொழும்பு உட்பட சில பகுதிகளில் இன்று நண்பகல் 12 மணிவரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வத்தளை, மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க-சீதுவ மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான மற்றும் மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 61 times, 1 visits today)