உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் தொடர்பில் அவதானம்
இன்றைய பிஸியான வாழ்க்கையில், பல நோய்களுக்கு நாம் ஆளாகிறோம். ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை காரணமாக நீரிழிவு நோய், உடல் பருமன், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், யூரிக் அமிலம் போன்ற பிரச்சனைகள் இப்போது பரவலாக காணப்படுகின்றன. இவற்றால் இன்னும் பல தீவிர நோய்களுக்கும் நாம் ஆளாகிய வெண்டிய நிலை ஏற்படலாம்.
இந்நாட்களில் உயர் இரத்த அழுத்த பிரச்சனை ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. அதிகப்படியான பதற்றம் காரணமாக இந்த பிரச்சனை நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இது தவிர, உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைபாடும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை சரியான நேரத்தில் கண்டறியப்படுவது முக்கியம்.
உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், நமது உடல் அதற்கான சில அறிகுறிகளை நமக்கு காட்டும். இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியம். இந்த அறிகுறிகளை கண்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது. உயர் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்.
தலைவலி
பெரும்பாலும் நம்மில் பலர் தலைவலியை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இதை புறக்கணித்து விடுகிறோம். ஆனால் தலைவலி உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாகும். போதிய அளவு ரத்தம் தலைக்கு செல்லாதபோது, தலையில் கனமான உணர்வு தொடங்குகிறது. இது கடுமையான தலைவலியாகவும் மாற வாய்ப்புள்ளது.
சோர்வு
காரணமே இல்லாமல் உடலில் அதிக சோர்வு இருப்பதும் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. அதிக சோர்வாக உணர்ந்தால், கண்டிப்பாக ஒரு முறை மருத்துவரை அணுக வேண்டும். இதனால் சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியும். சோர்வு மற்றும் பலவீனம் உயர் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கக்கூடும்.
மங்கலான பார்வை
நமது இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய உதவுகிறது. ஆனால் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, அது சரியாக செயல்பட முடிவதில்லை. இதன் காரணமாக கண் பார்வை மங்கலாகிவிடும். காரணமே இல்லாமல் திடீரென்று அனைத்தும் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தால், அது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
வாந்தி மற்றும் மயக்கம்
காலையில் படுக்கையில் இருந்து எழும் போது கீழே விழுவது போல் உணர்ந்தாலோ அல்லது மயக்கம் ஏற்பட்டாலோ அது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். வாந்தியும், குமடலும் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக கருதப்படுகின்றன.
நெஞ்சு வலி
அதிக இரத்த அழுத்தம் இருப்பது இதய பிரச்சனைகளை உண்டாக்கும். ஆகையால், நெஞ்சு வலி இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம். இதயத்தில் வலி இருந்தால் ஒரு முறை மருத்துவரை சென்று பார்த்து தேவையான பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது.