உலகம்

வடகிழக்கு எகிப்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 பல்கலைக்கழக மாணவர்கள் பலி, 33 பேர் படுகாயம் !

வடகிழக்கு எகிப்தின் சூயசை பகுதியில் கலாலா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகம் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் ஐன் சோக்னா நெடுஞ்சாலை வழியாக சென்ற கொண்டிருந்தபோது திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 33 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் நேற்று இரவு தெரிவித்துள்ளது. ஆனால் விபத்துக்கான காரணம் என்ன என்பதை அமைச்சகம் வெளியிடவில்லை.

இந்த சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு 28 ஆம்புலன்ஸ்கள் மூலம் சூயஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 36 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்