இலங்கை : கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூட நடவடிக்கை!
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன், இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பதில் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.




