அவசரமாக சொகுசு படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் லெபனான் மக்கள்

லெபனானில் ஏராளமானோர் நாட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறிவருகின்றனர்.
லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான சிரியாவுடன் இணைக்கும் முக்கிய சாலை இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்ததால், போக்குவரத்து தடை பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லெபனானில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்திலும் அடுத்த 3 வாரங்களுக்கு அனைத்து விமான டிக்கெட்களும் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
நாட்டை விட்டு வெளியேற விரும்பும் செல்வந்தர்கள் சொகுசு படகுகள் மூலம் அருகிலுள்ள தீவு நாடான சிப்ரஸுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
(Visited 58 times, 1 visits today)