கொழும்பில் பேருந்து – ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தலாகிய நபர் சுற்றிவளைப்பு
கொழும்பில் இருந்து அளுத்கம மற்றும் களுத்துறை மற்றும் பாணந்துறையிலிருந்து இரத்தினபுரிக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் கொழும்பு கோட்டையிலிருந்து கரையோர ரயிலில் மடிக்கணினி மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிய நபர் ஒருவரை களுத்துறை குற்றப்பிரிவு கைதுசெய்துள்ளது.
பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிகளின் மடிக்கணினிகள் அடங்கிய பைகள் தொடர்ந்து காணாமல் போவதாக களுத்துறை குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று களுத்துறை பிரதான பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரண ஹல்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் விசாரணைகளின் போது திருடப்பட்டவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஏனைய அலுவலக பணியாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், பல்வேறு இடங்களில் குறைந்த விலையில் திருடப்பட்ட மிகவும் பெறுமதியான 7 மடிக்கணினிகள் மற்றும் ஐந்து கையடக்கத் தொலைபேசிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், அந்தப் பணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்தேக நபர் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ளவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் இன்று ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.