இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது

டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பின்னால் அமர்ந்திருந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் புகார் கூறியதை அடுத்து விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியதும் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் 45 வயதான ராஜேஷ் ஷர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்பெண் ஜெய்ப்பூர் மற்றும் டெல்லிக்கு பயணம் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பெண்ணுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜேஷ் ஷர்மா பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ந்தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
(Visited 10 times, 1 visits today)