கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் மருத்துவமனையில் அனுமதி
சக மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்தியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு இளநிலை மருத்துவர் கடுமையான நீரிழப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அவர் அனுமதிக்கப்பட்ட போது அவர் கடுமையாக நீரிழப்புடன் இருந்தார், நாடித் துடிப்பு மிக அதிகமாக இருந்தது மற்றும் மிகவும் நிலையற்ற நிலையில் இருந்தார்” என்று மருத்துவமனையின் பேராசிரியர் சோமா முகோபாத்யாய் கூறினார்.
அனிகேத் மஹதோ மற்றும் ஆறு பேரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்,
மருத்துவர்களுக்கு போதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லை, அவர்களில் பலர் நெரிசலான, மோசமான மருத்துவமனைகளில் நீண்ட ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மருத்துவமனையில் 31 வயதான மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மருத்துவர்களின் போராட்ட அலையைத் தூண்டியுள்ளது,
பெண்களுக்கு அதிக பணியிட பாதுகாப்பு மற்றும் அவர்களின் சக ஊழியருக்கு நீதி கோரி, மருத்துவமனை பாதுகாப்பு பணிக்குழுவை உருவாக்க இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தை தூண்டியது. .
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று நாட்டின் மிகப்பெரிய மருத்துவர்களின் அமைப்பான இந்திய மருத்துவ சங்கம் மாநில முதல்வருக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளது.
மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும், பல மருத்துவக் கல்லூரிகளில் ஊழல் என்று அவர்கள் கூறுவதை விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை மருத்துவர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.