உலகம்

நேபாளம்: மலையேற்றத்தின்போது மாயமான ரஷ்ய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்பு

உலகின் ஏழாவது உயரமான சிகரத்தில் ஐந்து ரஷ்ய மலையேறுபவர்கள் இறந்ததாக நேபாளத்தில் ஒரு பயண அமைப்பாளர் தெரிவித்தார்

ரஷ்யாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் கடந்த 6ம் திகதி நேபாளத்தில் இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கினர்.

முகாமில் இருந்து காலை 6 மணிக்கு பயணத்தை தொடங்கிய வீரர்கள் உடனான ரேடியோ தொடர்பு காலை 11 மணியளவில் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து மாயமான மலையேற்ற வீரர்களை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், மாயமான மலையேற்ற வீரர்கள் 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் மூலம் நடைபெற்ற தேடுதல் பணியின்போது மலையின் 7 கிலோமீட்டர் உயரத்தில் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.

மலை சிகரத்தில் இருந்து கீழே விழுந்து 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்