பதவியேற்ற சில நாட்களில் படுகொலை செய்யப்பட்ட மெக்சிகோ மேயர்!
மெக்சிகோவின் வன்முறையால் பாதிக்கப்பட்ட குரேரோ மாகாணத்தின் தலைநகர் மேயர் பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டார் என்று அம்மாநில ஆளுநர் உறுதிப்படுத்தினார்.
தென்மேற்கு மெக்ஸிகோவில் சுமார் 280,000 மக்கள் வசிக்கும் நகரமான சில்பான்சிங்கோ நகரின் மேயராக பதவியேற்ற ஆறு நாட்களில் அலெஜான்ட்ரோ ஆர்கோஸ் கொல்லப்பட்டார்.
“அவரது இழப்பு ஒட்டுமொத்த குரேரோ சமுதாயத்தினரையும் துக்கப்படுத்துகிறது மற்றும் எங்களை கோபத்தில் நிரப்புகிறது” என்று குரேரோ கவர்னர் ஈவ்லின் சல்காடோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் தொடர்ச்சியாக அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
மெக்சிகோவில் கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற மேயர் தேர்தல்களுக்கு முன்னதாக, சுமார் ஆறு வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.