Suicide pod பற்றிய குற்றவியல் விவாதங்கள் : விண்ணப்ப செயல்முறை இடைநிறுத்தம்!
சுவிட்சர்லாந்தில் Suicide pod பற்றிய குற்றவியல் விசாரணைகளுக்கு மத்தியில் அதனை பயன்படுத்துவதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்ளும் செயல்முறை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் எல்லைக்கு அருகில் செப்டம்பர் 23 அன்று “சர்கோ” கருவியைப் பயன்படுத்திய முதல் நபரான அமெரிக்காவைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 64 வயது பெண் உயிரிழந்ததை தொடர்ந்து Suicide pod பற்றி விவாதங்கள் அரசியல் வாதிகளிடம் பல விவாதங்களை தோற்றுவித்துள்ளது.
யாருடைய உதவியும் இன்றி தற்கொலை செய்து கொள்வது Suicide pod என அழைக்கப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், கருணைக்கொலைக்கு நிகரான இவ்வாறான செயல்முறைக்கு ஒரு சில நாடுகள்அனுமதி வழங்குகின்றன. அவற்றுள் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும்.
செப்டம்பர் 23 ஆம் தேதி வரை சுவிட்சர்லாந்தில் சர்கோவைப் பயன்படுத்த 371 பேர் “விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல் பயன்பாட்டிற்கு பிறகு விண்ணப்பிக்கும் செயல்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.