மத்திய கிழக்கில் நெருக்கடி – உலகளவில் தொடர்ந்து அதிகரிக்கு எண்ணெய் விலை
உலகளவில் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் மிக அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் விநியோகம் தடைபடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
கடந்த முதலாம் திகதி ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் ஈரானின் எண்ணெய்க் கட்டமைப்பைத் தாக்கும் என்று நம்பப்படுகிறது.
அவ்வாறு நடந்தால், எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைச் சந்திக்க முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்.
ஈரான் அன்றாடம் 1.8 மில்லியன் பீப்பாய் எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது.
அதை தவிர்த்துவிட்டால், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை குறைந்தது 5 டொலர் கூடும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
(Visited 8 times, 1 visits today)