ஆசியா செய்தி

இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஈரான்

காசா மீதான போர் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு பழி தீர்க்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது.

ஈரானில் இருந்து 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்னர்.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இந்த ‛தாக்குதல்’ நடந்தால் ஈரான் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா எச்சரித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இயங்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான பிரச்சனை போராக மாறி உள்ளது.

காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

இதனை ஈரான் கடுமையாக எதிர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி ஈரான் என்பது இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்படும் தனது ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் ஈரான், இஸ்ரேலை தாக்கி வருகிறது.

இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. ஹிஸ்புல்லாவின் படை தளபதிகளை ஒவ்வொருவராக இஸ்ரேல் தீர்த்து கட்டியது. கடைசியாக ஹிஸ்புல்லாவின் தலைமை தளபதி நஸ்ருல்லாவையும் ஏவுகணை தாக்குதல் மூலம் 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தீர்த்து கட்டியது.

இதனால் இஸ்ரேல் மீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலால் இஸ்ரேலில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஈரானின் இந்த தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. இருப்பினும் சேத விபரங்கள் பற்றிய எந்த தகவலையும் இஸ்ரேல் வெளியிடவில்லை.

(Visited 49 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!