இராணுவத்தை பலப்படுத்தும் டென்மார்க் அரசாங்கம்!
இராணுவ வசதிகளை நவீனப்படுத்தவும், இடிந்த, பாழடைந்த கட்டிடங்களை புதுப்பிப்பதற்காகவும், மற்றும் பாழடைந்த கட்டிடங்களை புதுப்பிக்கவும், 38 பில்லியன் க்ரோனர்களை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு மந்திரி, Troels Lund Poulsen, முந்தைய அரசாங்கங்களும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் அத்தகைய வசதிகளுக்கு பணம் செலவழிக்க முன்னுரிமை கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
“பல ஆண்டுகளாக, பாதுகாப்புக் கொள்கை நிலைமை ஆயுதப் படைகளை சோர்வடையச் செய்துள்ளது என்றுத் தெரிவித்த அவர், அதை மீட்டெடுக்கும் பணியை நாங்கள் மேற்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.
“எங்களிடம் வீரர்கள் இல்லை, பல கட்டிடங்கள் புதுப்பித்த நிலையில் இல்லை, அல்லது பாழடைந்துள்ளன என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒதுக்கப்படும் 38 பில்லியன் குரோனரில், 11 பில்லியன் குரோனர் ($1.6 பில்லியன்) புதிய முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.