வட அமெரிக்கா

கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நாட்டின் அரிசோனாவில் அமைந்துள்ள டெம்பே நகரில் உள்ள ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் இது நடந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இரண்டு தரப்பும் தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரச்சாரத்தில் பங்கேற்று வருகின்றனர்.

முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் மீது இரண்டு முறை கொலை முயற்சி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல் முறை நடத்தப்பட்ட தாக்குதலில் ட்ரம்ப்பின் காது பகுதியை துப்பாக்கி குண்டு உரசியது. அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டாவது முறை நடந்த தாக்குதலில் அவர் காயமின்றி தப்பினார். இந்தச் சூழலில் கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சார அலுவலகம் குறி வைக்கப்பட்டுள்ளது.

After Donald Trump, Kamala Harris' campaign office targeted, police say |  World News - Business Standard

டெம்பே சிட்டியில் அமைந்துள்ள அலுவலகத்தில் ஒரு மாத காலத்துக்குள் நடந்துள்ள இரண்டாவது துப்பாக்கிச்சூடு தாக்குதல் இது. அமெரிக்க நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் பொலிஸ் தரப்பில் தாக்குதலை உறுதி செய்ததாக தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியின் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் உள்ள கதவு மற்றும் ஜன்னலை துப்பாக்கி தோட்டா துளைத்துள்ளது. அது தொடர்பாக காட்சிகளை உள்ளூர் செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. சம்பவம் நடந்த போது அலுவலகத்தில் யாரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் யாரும் காயமடையவில்லை என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தாக்குதலை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. ‘இந்த வன்முறை செயல் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது’ என ஜனநாயக கட்சியின் அரிசோனா மாகாண நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் வெள்ளிக்கிழமை அரிசோனாவுக்கு கமலா ஹாரிஸ் வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தின் போது அமெரிக்கா – மெக்சிக்கோ எல்லை பகுதிக்கு அவர் செல்ல உள்ளார். இந்நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content