27 நாடுகளில் பரவிய புதிய வகை கொரோனா: புதிய அலை உருவாகலாம் என எச்சரிக்கை
எக்ஸ்இசி வேரியண்ட் (XEC variant) என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.
புதிய வகை கொரோனா ஜூன் மாதத்தில் ஜெர்மனியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது,
அதன் பின்னர் இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் தொற்று பரவி இருக்கிறது.
அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை திரிபு குறித்து இங்கிலாந்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தற்போது 3 கண்டங்களில் 27 நாடுகளில் பரவி உள்ளது. உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.