தொடர்ச்சியாக மூக்கு வடிதல் பிரச்சினை : வைத்தியரை நாடிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சிரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு அடிக்கடி சளியுடன் தொடர்புடைய மூக்கு வடிதல் பிரச்சினை இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தனக்கு என்ன நேர்ந்துள்ளது என்பதை கண்டறிய மருத்துவரை அணுகாமல் சளிக்கு எடுத்துக்கொள்ளும் பொதுவான மாத்திரைகளை அவர் பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.
அதாவது அவருக்கு தொடர்ச்சியாக மூக்கு வடிதல் பிரச்சினை இருந்துள்ளது. இதற்கு அவர் சாதாரண மாத்திரைகளை எடுத்துவந்துள்ளார்.
பின்னர் மருத்துவ பரிசோதனையில் மண்டை ஓட்டில் உள்ள திறப்புகள் மூலம் மூளைப் பொருள் வெளியேறும் ஒரு நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது என்செபலோசெல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்த்தியுள்ளது.
என்செபலோசெல் ஒரு அரிய பிறப்பு குறைபாடு மற்றும் உலகளவில் 10,400 பிறப்புகளில் ஒருவரை பாதிக்கிறது, தோராயமாக ஒரு வருடத்திற்கு 375 குழந்தைகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.