ஈக்வடாரில் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல் : பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!
ஈக்வடாரில் உள்ள பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் அங்கு பரவலான மின் தடைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவிற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) அதன் பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது, தென் அமெரிக்க தேசத்தை பாதிக்கும் இடையூறுகள் குறித்து விடுமுறைக்கு வருபவர்களை எச்சரிக்கிறது.
செப்டம்பர் 23 திங்கள் முதல் செப்டம்பர் 26 வியாழன் வரை ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மின் தடை ஏற்படும் என்றும் Guayas, Los Rios, Manabi, Orellana, Santa Elena, El Oro மற்றும் Azuay மாகாணத்தில் உள்ள Camilo Ponce Enriquez மாவட்டம் உட்பட பல மாகாணங்களில் ஒரே நேரத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.