குழந்தைகளை கைவிட்டுச் செல்லும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கை
அதிகரித்து வரும் சிறுவர்கள் கொலை, துஷ்பிரயோகம் மற்றும் வீதிகளில் விடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பெற்றோர் தத்தெடுக்க முடியாத 3 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளை ஒப்படைக்க மாகாண மட்டத்தில் நிறுவனங்களை அமைச்சர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 80 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 60 சிறுவர்கள் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சட்டத்தின்படி, குழந்தைகளை கைவிடும் பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
புதிய திருத்தங்களின்படி, குழந்தைகளை நிலையங்களில் குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது.