போலந்தில் திகிலூட்டும் மரணச் சடங்கால் உயிரிழந்த சிறுவன் : மனித எச்சங்கள் மீட்பு!
ஒரு காட்டுமிராண்டித்தனமான திகிலூட்டும் பழங்கால நடைமுறையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஐரோப்பிய நகரமொன்றில் தொல்பொருள் ஆய்வாளர்கள் வாம்பயரின் சடலங்களை கண்டறிந்துள்ளனர்.
போலந்தின் செல்மில் உள்ள 13 ஆம் நூற்றாண்டு பிஷப் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இரண்டு நிலைகளால் குறிக்கப்பட்ட ஒரு புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
உள்ளே கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள், சிறுவனுடையது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவரின் கல்லறையில் பல திடுக்கிடும் தகவல்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சிறுவனின் எச்சத்தை ஆய்வு செய்ததில் உடற்பகுதி முழுவதும் கற்களால் தரையில் அழுத்தப்பட்டுள்ளதை காண முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.
குழந்தை புதைக்கப்படுவதற்கு முன்பு தலை துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றும் மூட நம்பிக்கை கொண்டவர்கள் இதனை மேற்கொண்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
முகத்தை தரையில் அழுத்தி அடக்கம் செய்தல், தலையை வெட்டுதல் அல்லது உடலில் கற்களை வைப்பது ஆகியவை பேய் பிசாசு என்று கருதப்படும் நபர் கல்லறையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் சில அடக்கம் ஆகும் என்றும் இவற்றை பழங்காலத்தில் மேற்கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.