3000 ஆண்டுகள் பழமையான வரைபடத்தை கண்டுப்பிடித்த ஆய்வாளர்கள்!
உலகின் மிகப் பழமையான வரைபடமாக கருதப்படும் பாபிலோனிய வரைபடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
2,600 மற்றும் 2,900 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்க்பபட்டதாக கருதப்படும் இந்த வரைபடமானது இமேகோ முண்டி பண்டைய நாகரிகத்தின் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய ஒரு தனித்துவமான பார்வையை ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் கியூனிஃபார்மில் எழுதப்பட்ட உரை துண்டுகளுடன் ஒரு வட்ட வரைபடத்தைக் கொண்டுள்ளது. வரைபடம் மெசபடோமியாவை சித்தரிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வரைபடம் முதலில் 1882 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹார்முஸ்த் ரஸ்ஸாம் என்பவரால் ஈராக்கில் உள்ள பண்டைய பாபிலோனிய நகரமான சிப்பாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தற்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.