நித்திரையின்றி தவிக்கும் மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் : புதிய மாத்திரையை பரிசோதித்த வைத்தியர்கள்!
மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் உறக்கமின்றி தவித்து வருவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கால்-கை வலிப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மாத்திரை உறக்கமின்றி தவிப்பவர்களுக்கு சிகிச்சையளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சல்தியேம் என்ற மருந்தை உட்கொள்ளும் நோயாளிகள், நித்திரையின்றி தவித்தல் மற்றும் உரத்த குறட்டை உள்ளிட்ட நோய்களுக்கு 40 சதவீதமான தீர்வை வழங்குவதாக ஸ்வீடிஸ் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தூக்கமின்மையானது மூச்சுத்திணறல் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற கொடிய நிலைமைகளின் அபாயத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக மேற்கொள்ளப்படும் அல்லது நடைமுறையில் உள்ள சிகிச்சையானது தூங்கும் போது ஒரு சங்கடமான இயந்திர முகமூடியைப் பயன்படுத்துகின்றனர், இது அவர்களின் மூக்கு மற்றும் வாயில் புதிய காற்றை செலுத்துகிறது.
ஆனால் பல நோயாளிகள் இயந்திரங்கள் சங்கடமான மற்றும் பயன்படுத்த கடினமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் புதிய சிகிச்சையை கண்டுப்பிடிப்பதற்கான அவசியத்தை அதிகரித்துள்ளது.
இவற்றில் ஒன்று சல்தியாம், இது முக்கியமாக கால்-கை வலிப்புக்கான மருந்தாகப் பயன்படுத்தப்படும் அதே வேளையில், மக்களின் மேல் சுவாசப்பாதையில் தசைகளைத் தூண்டுவதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்துதவாக ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வரும்போது மில்லியன் கணக்கான ஐரோப்பியர்கள் பயன்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது.