தோனியின் சாதனையை சமன் செய்த துருவ் ஜுரல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை இளம் வீரர் துருவ் ஜுரல் சமன் செய்துள்ளார்.
துலிப் கோப்பை தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்கள்(7) பிடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனி சாதனையை ஜுரலும் ஞாயிற்றுக்கிழமை படைத்தார்.
துருவ் ஜுரலீன் சாதனை
துலிப் கோப்பை தொடரில் இந்தியா ஏ மற்றும் பி அணிகள் மோதிக் கொண்ட போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியா பி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா ஏ அணியின் விக்கெட் கீப்பரான துருவ் ஜுரல், முதல் இன்னிங்ஸில் ஒரு கேட்சும், இரண்டாது இன்னிங்ஸில் 7 கேட்சுகளும் பிடித்து அசத்தலான பீல்டிங் செய்தார்.
இதன்மூலம் 2004-05 துலிப் தொடரிலில், கிழக்கு மண்டலத்துக்காக விளையாடி, தோனி படைத்த சாதனையை 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜுரல் சமன் செய்துள்ளார்.
மூன்று, நான்காம் இடம்
1973 – 74 துலிப் தொடரில் மத்திய மண்டலத்துக்காக விளையாடிய சுனில் பெஞ்சமின், 6 கேட்சுகள் பிடித்து 3-வது இடத்திலும், 1980-81ஆம் ஆண்டில் தெற்கு மண்டலத்துக்காக விளையாடி 6 கேட்சுகள் பிடித்த சதானந்த விஸ்வநாத் 4-வது இடத்திலும் உள்ளனர்.