ஆஸ்திரேலியாவில் வடிகட்டாத நீரை பருகிய நபருக்கு நேர்ந்த சோகம் : கொஞ்சம் கொஞ்சமாக கரையும் நுரையீரல்!
அவுஸ்ரேலியாவில் நண்பர் ஒருவர் வீட்டில் செய்த சிறிய தவறினால் தனது நுரையீரல்களின் பெரும்பகுதியை இழந்த நபர் ஒருவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
33 வயதான கிரீஸ் கேப்பர் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் நண்பரின் வீட்டில் இருந்த ஊற்று நீரை பருகியதாக தெரிவித்துள்ளார்.
அவர் குறித்த நீரை வடிகட்டாமல் பருகியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த நீரை பருகிய சில நாட்களுக்கு பிறகு அவரது உடலில் மாற்றங்களை கண்டதாக கூறுகிறார்.
குறிப்பாக என்ன பிரச்சினை என்று தெரியாமல் பல வைத்தியர்களை நாடியதாகவும் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தான் நுரையீரலை கொஞ்சம் கொஞ்சமாக இழந்தது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 06 வாரங்களுக்கு பின்பு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது இனங்காணப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நோய் அவரது முழங்கைகளுக்கும் பரவியதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான், நீரிலும் மண்ணிலும் காணக்கூடிய டர்பர்குலோசிஸ் மைக்கோபேடீரியாவின் விளைவாக நம்பப்படும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிய முடிந்ததாக தெரிவித்துள்ள அவர், ஒவ்வொரு நாளும் 16 மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.