ஆஸ்திரேலியாவில் தனியாக வீட்டில் இருந்த 3 சிறுவர்களுக்கு நேர்ந்த கதி
ஆஸ்திரேலியா – மெல்பேர்ன், சிடன்ஹாமில் நேற்று இரவு வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் அங்கிருந்த மூன்று சிறுவர்கள் வீட்டில் தனியாக இருந்தார்களா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று இரவு 9.30 மணியளவில் இந்த வீட்டில் இருந்து வெடி சத்தத்துடன் தீ பரவியதையடுத்து அயலவர்கள் அவசர சேவைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் வந்த தீயணைப்பு படையினரால் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர்.
மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவதற்கு முன்னர் ஆம்புலன்ஸ் வைத்தியர்களால் அவர்கள் ஸ்தலத்திலேயே சிகிச்சை பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.
சுமார் 30 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, வீட்டிற்குள் நுழைந்து தீயை அணைத்து, சுவாசக் கருவிகளை அணிவித்து வீட்டில் இருந்தவர்களைத் தேடினர்.
இரவு 11 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, விக்டோரியா பொலிஸார் அறிக்கை வெளியிட்டனர். தீ சந்தேகத்திற்குரியதாக கருதப்பட்டு வெடிபொருள் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
தீயினால் வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும், தீ விபத்தின் போது அல்லது அதற்கு முன்னர் வீட்டில் வேறு எவரேனும் இருந்தார்களா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜூன் மாதம் விற்கப்பட்ட வீட்டில் இதுவரை யாரும் வசித்ததாக தெரியவில்லை என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.