அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – கருத்துக் கணிப்பில் டிரம்ப் மீண்டும் முன்னிலை

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புடன் நாளை நடைபெற உள்ள விவாதத்தில் கலந்துகொள்ள தயார் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
நவம்பர் 5-ஆம் திகதி நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.
ஏபிசி நியூஸ் சார்பில் ஃபிலடெல்ஃபியாவில் இந்த விவாதம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நியூயார்க் டைம்ஸ் மற்றும் சீயென்னா கல்லூரியும் நடத்திய கருத்துக் கணிப்பில், டிரம்ப் 48 சதவீதத்துடன் கமலா ஹாரிஸை விட ஒரு சதவீத வித்தியாசத்துடன் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, நாளை நடைபெற உள்ள விவாதம், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
விவாதத்தில் டிரம்ப், கமலா ஹாரிஸ் கலந்துகொள்ளும் இருவரும், நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து எடுத்துவைக்கும் கருத்துகள், பதிலுரைகள் வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.