சிங்கப்பூரில் நடக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒவ்வொரு வெள்ளி வழங்க திட்டம்!

சிங்கப்பூரில் ஒரு நல்ல காரணத்துக்காக ஓடும் அல்லது நடக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒவ்வொரு வெள்ளி நன்கொடை உள்ளூர் அற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
மக்கள் கழகம் ஏற்பாட்டில் புதிய இயக்கத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் இறுதி வரை இயக்கம் தொடரும். திரட்டப்படும் பணம் இந்த ஆண்டு அதிபர் சவால் நிதிக்கு வழங்கப்படும். 250,000 வெள்ளி நிதி திரட்டவும் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.
புதிய இயக்கத்தை அதிபர் தர்மன் சண்முகரத்னம் இன்று தொடக்கிவைத்தார்.
சுமார் 850 பேர் அவரோடு சேர்ந்து 2 கிலோமீட்டர் நடையில் கலந்துகொண்டனர்.
மூத்தோரையும், உடற்குறையுள்ளோரையும் உள்ளடக்கும் வகையில் நடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
(Visited 23 times, 1 visits today)