செய்தி விளையாட்டு

ஷர்துல் தாக்கூருக்கு உதவ மறுத்தவர் தோனி -ஓபனாக சொன்ன ஹர்பஜன் சிங்!

சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது இளம் வீரர் ஷர்துல் தாக்கூர் பவுலிங்கில் பவுண்டரிகள் அதிகமாக விளாசப்பட்ட நேரத்தில் கூட, கேப்டன் தோனி அவருக்கு உதவி செய்ய மறுத்தார் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

தோனி உதவ மறுத்ததற்கான காரணத்தையும் ஹர்பஜன் சிங் கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணியின் வளர்ச்சி அபரிவிதமானதாக அமைந்துள்ளது.

2018, 2021, 2023 என்று மூன்று சீசன்களில் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி, 3 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

இதற்கு முதன்மையான காரணமாக சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி அமைந்திருக்கிறார்.

தோனியின் கேப்டன்சி, அணியை கட்டமைத்த விதம் என்று டி20 கிரிக்கெட்டுக்கு புதிய ப்ளூபிரிட்டை தோனி கொடுத்தார் என்றே சொல்லலாம்.

ஒரு சீசனில் தோல்வியடைந்தால், அடுத்த சீசனில் எழுவது எப்படி என்பதை ஒவ்வொரு முறையும் தோனி கண்டறிவதும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு அவர் வீரர்களை தயார்ப்படுத்தும் விதம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

எப்படி ஒவ்வொரு வீரரும் சிஎஸ்கே அணிக்குள் வரும் போது மட்டும் மிகச்சிறப்பாக விளையாடுகிறார் என்று பலருக்கும் ஆச்சரியம் இருக்கும்.

ஏனென்றால் ஷேன் வாட்சன், ரஹானே, உத்தப்பா, சிவம் துபே, நெஹ்ரா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷர்துல் தாக்கூர் என்று அந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இதுகுறித்து சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஹர்பகன் சிங் பேசி இருக்கிறார்.

அதில், சிஎஸ்கே அணிக்காக நான் 3 ஆண்டுகள் விளையாடினேன். அதேபோல் ஷர்துல் தாக்கூர் 4 சீசன்கள் விளையாடினார்.

ஒரு போட்டியில் ஷர்துல் தாக்கூர் பவுலிங் செய்து கொண்டிருந்த போது, நான் ஃபைன் லெக் திசையில் ஃபீல்டிங் நிறுத்தப்பட்டேன்.

அப்போது பேட்டிங் செய்த வில்லியம்சன் அசால்ட்டாக ஷர்துல் தாக்கூர் பவுலிங்கில் பவுண்டரிகளாக விளாசி கொண்டே இருந்தார்.

அப்போது நான் தோனியிடம் நேரடியாக சென்று, ஷர்துல் தாக்கூரிடம் லெந்தை மாற்ற சொல்லுங்கள் என்று கூறினேன்.

அதற்கு தோனி, இன்று நான் அவனுக்கு சொல்லி கொடுத்தால், அவனால் என்றுமே கற்றுக் கொள்ள முடியாது என்று பதிலளித்தார்.

தனது பவுலிங் மூலம் பெற்ற அனுபவத்தை வைத்து ஷர்துல் தாக்கூர் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தோனி தீவிரமாக இருந்தார்.

தானாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளும் போது, இன்னும் வேகமாக புரிந்து கொள்ள முடியும்.

ஒரு பவுலர் அவரை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்று மறைமுகமாக கூறினார். அதுதான் தோனியின் ஸ்டைல்.

யாருக்கும் எதையும் ஊட்டி விட முடியாது என்பது தோனி நம்பிக்கை. விளையாட்டில் அப்படி எதையும் செய்துவிட முடியாது.

தோனி அமைதியாக இருந்தாலும், எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக உணர்ந்தே இருப்பார்.

அவரால் ஒரு போட்டியை வென்று கொடுக்கும் அவரின் திறமை, சிஎஸ்கே அணியிலும் எதிரொலிக்கிறது என்றே நினைக்கிறேன்.

அதேபோல் ஒருநாள் சொந்த சாதனைகள் மீது நம்பிக்கை கொண்டவர் அல்ல. அவருக்கு எப்போது அணி தான் முக்கியம்.

அதேபோல் சிஎஸ்கே அணி கொஞ்சம் ஸ்பெஷல். ஏன் ஸ்பெஷல் என்று கூறுகிறேன் என்றால், வெற்றியோ.. தோல்வியோ..

அதன் சூழலில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நீண்ட அனுபவம் கொண்டுள்ள ஹர்பஜன் சிங், மும்பை அணியை விடவும் சிஎஸ்கே அணியை ஸ்பெஷல் என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி