லிபியாவில் இருந்து ஐரோப்பா புறப்பட்ட படகு : தீயிட்டு எரித்த படையினர்!

லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி சட்டவிரோதமாக பயணித்த மக்களை அந்நாட்டு கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
எகிப்து மற்றும் சிரியாவில் இருந்து 32 குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளான சில நாட்களுக்கு பிறகு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
64 புலம்பெயர்ந்தோருடன் பயணிக்க தயாராக இருந்த படகே இவ்வாறு இடைமறிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடத்தல் காரர்கள் மீண்டும் குறித்த படகை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் படகிற்கும் கடலோர காவல் படையினர் தீ வைத்து எரித்துள்ளனர்.
சமீபத்திய ஆண்டுகளில் மனித கடத்தல்காரர்கள் லிபியாவில் இருந்து ஏராளமான மக்களை சட்டவிரோதமாக ஐரோப்பிற்கு அழைத்து சென்று இலாபம் பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 17 times, 1 visits today)