பாலியில் குவியும் சுற்றுலா பயணிகள் – எடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை
இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தீவான பாலியில் கட்டுமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய ஹோட்டல்களையும் சுற்றுப்பயணிகள் தங்கும் வசதிகளையும் கட்டுவதைத் தற்காலிகமாக நிறுத்தவிருக்கிறது.
தீவில் அளவுக்கு அதிகமான மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணிகள் அதிகம் வரும் நிலையில் விவசாய நிலங்களைப் பாதுகாக்கவும் அந்த முயற்சி எடுக்கப்படுகிறது.
டென்பாசார், பாடுங், கியான்யார், தபானான் வட்டாரங்களை உள்ளடக்கிய சார்பாகிதா பகுதியில் ஹோட்டல் கட்டும் திட்டங்கள் பாதிக்கப்படும்.
நடவடிக்கையை அமலாக்கம் செய்யுமாறு மத்திய அரசாங்கத்தை பாலி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)