இங்கிலாந்தில் எவ்வித காரணமும் இன்றி கல்வியை இடைநிறுத்தும் மேல்நிலை பள்ளி மாணவர்கள்!
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 20,000 மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விளக்கம் இல்லாமல் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டிடியூட் ஃபார் பப்ளிக் பாலிசி ரிசர்ச் திங்க் டேங்க் மற்றும் கல்வித் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான ஜென்னி கிரஹாம், அவர்களுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. சிலர் கல்வியிலிருந்து முற்றிலும் விலகியிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் மாணவர் இடைநீக்கங்கள் மற்றும் விலக்குகள் கடந்த ஆண்டில் ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் உயர்ந்துள்ளன, மாணவர்கள் 32 மில்லியன் நாட்கள் கற்றலை இழந்துள்ளனர் என குறித்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
(Visited 14 times, 1 visits today)