பிரான்ஸில் குடையுடன் போராட்டத்திற்குள் நுழைந்தவர்களால் குழப்பம்
பிரான்ஸில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மே தின ஆர்ப்பாட்டத்தின் போது பலர் கறுப்பு குடைகளைப் பிடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மழைக்கு அறிகுறியே இல்லாத நாளில் போராட்டக்காரர்கள் ஏன் குடையுடன் வந்திருந்தார்கள் என்பதே இந்த குழப்பத்திற்கு காரணமாகியுள்ளது.
ஓய்வூதியத்துக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்களில் தொடர்ச்சியாக அதிகளவு வன்முறைகள் இடம்பெற்று வருவதை அடுத்து, பொலிஸார் ட்ரோன் கருவிகளில் கமராக்களை பொருத்தி போராட்டக்காரர்களை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பல்வேறு நகரங்களில் இந்த ட்ரோன் கமராக்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக லியோன் நகரில் பொலிஸார் ட்ரோன் கருவிகளைப் பறக்கவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இவ்வகை ட்ரோன் கமராக்களில் சிக்கிவிடாமல் இருக்க, போராட்டக்காரர்கள் குடைகளைப் பிடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.
இதுபோன்ற சம்பவம் ஒன்று ஜப்பானின் Hong Kong நகரில் முன்னதாக 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது.
அங்கு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது பொதுமக்கள் பலர் ட்ரோன் கருவிகளிடம் இருந்து தப்பிக்க குடைகளை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.