அனுராதபுரம் வைத்தியசாலையில் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய தம்பதியினர் கைது
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டுக்கு இலக்காகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞன் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, இளைஞன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இருவரும் தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, மதவாச்சி, பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 23 வயதுடைய திருமணமான தம்பதியரை, மெடவாச்சி பொலிசார் கைது செய்தனர்.
ஏப்ரல் 26 ஆம் திகதி, மதவாச்சிய பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் குழுவிற்கு இடையில் ஒரு விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், ஏப்ரல் 28 ஆம் திகதி, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் 66 ஆம் வார்டில் சிகிச்சை பெற்று வந்த 24 வயதுடைய நோயாளியான ருவன் கீத் உதித தாக்கப்பட்டார்.
அதிகாலை 04.30 மணியளவில் வார்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இளைஞரின் கால் மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், சிறிது நேரத்திலேயே இளைஞர் உயிரிழந்தார்.
தம்பதியினர் இன்று மதவாச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், திருமணமான இருவரைத் தவிர மேலும் மூன்று சந்தேகநபர்கள் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக, மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.