ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் கனமழை, பலத்த காற்று; மின்சாரமின்றி ஆயிரக்கணக்கானோர் அவதி

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தில் கனமழை, பலத்த காற்று காரணமாக செப்டம்பர் 1ஆம் திகதியன்று ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இன்றி தவித்தனர்.
இந்நிலையில், டாஸ்மேனியாவில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்பட்டால் டாஸ்மேனிய மக்கள் பல நாள்களுக்குக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்று அவசரநிலைப் பிரிவு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடக்கூடும் என்றும் அதன் விளைவாக அதிகாரிகளால் மக்களைச் சென்றடைய முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உதவி கேட்டு ஏறத்தாழ 330 அழைப்புகள் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
(Visited 35 times, 1 visits today)