ஐரோப்பா

ரஷ்ய அரசியலில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டும் புடினின் இரகசிய காதலி

சமீபத்தில், புடின் கொல்லப்படலாம் என்றும், அவர் கொல்லப்பட்டால் ரஷ்யா துண்டு துண்டாக உடைந்து நொறுங்கிவிடும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியிருந்த நிலையில், புடினுடைய இரகசிய காதலி, ரஷ்ய அரசில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புடினுடைய இரகசிய காதலி என அறியப்படுபவர் அலீனா கபேவா(39). புடின் தன் முதல் மனைவியாகிய புடினாவுடன் வாழும்போதே, அலீனாவுடன் அவர் இரகசிய தொடர்பு வைத்திருந்ததாக தகவல் உண்டு. பின்னர் சுவிட்சர்லாந்தில் மறைந்துவாழ்ந்த அலீனா, புடினுடைய இரண்டு குழந்தைகளுக்கு தாயானதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், தான் புடினுடன் வாழும் மாளிகையிலிருந்து 2,000 மைல் தொலைவில் அமைந்திருக்கும் சைபீரியாவுக்கு அலீனா அனுப்பிவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த செய்தியை உறுதி செய்வதுபோல், சைபீரியாவில் நடைபெறும் சிறுவர்களுக்கான தடகள போட்டிகளில் அலீனா கலந்துகொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதாவது, புடின் உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, அவருக்கு நெருக்கமானவர்கள் மீது கடும் தடைகள் விதிக்கப்பட்டன. அவ்வகையில் அலீனா மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், அவரால் முன்போல எளிதாக மேற்கத்திய நாடுகள் எதற்கும் பயணிக்கமுடியாது. ஆகவேதான் அவர் சைபீரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அவர் எவ்வளவு காலம் சைபீரியாவில் இருப்பார் என்பது தெரியவில்லை.

ரஷ்ய அரசில் முக்கிய பதவிக்கு திட்டம் தீட்டும் புடினுடைய இரகசிய காதலி | Putin Secret Girlfriend Position In Russia

இந்நிலையில், அலீனா, ரஷ்ய அரசில் முக்கிய பதவி ஒன்றைப் பெற திட்டம் தீட்டிவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.ரஷ்ய பெடரேஷன் கவுன்சிலின் செனேட்டில், அதிகாரம் மிக்க உயர் பதவி, சபாநாயகர் பதவி. அந்த பதவியிலிருக்கும் புடினுடைய மூத்த பெண் அதிகாரியான Valentina Matviyenko (74), விரைவில் ஓய்வுபெற இருக்கிறார்.ஆகவே, அந்த பதவியைப் பெற அலீனா திட்டம் தீட்டி வருகிறாராம்.

இந்நிலையில், புடின் எதிர்ப்பாளரான, ரஷ்ய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான Maria Maksakova என்பவர், புடின் மோசமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆட்சி செய்ய முடியாமல் போனால், அல்லது ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டால், ஒரு அதிகாரம் மிக்க பதவியில் தான் இருக்கவேண்டும் என அலீனா திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார்.ஆனால், அலீனா சபாநாயகரானபின் புடின் பதவியிலிருந்து விலகினால், அலீனா மற்றும் அவரது பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வளவு பயங்கரமாக இருக்கும், அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அலீனா புரிந்துவைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அலீனா தடகள விளையாட்டில் நாட்டுக்காக பெற்ற பதக்கங்கள் அவரது தலைவிதியிலிருந்து அவரைக் காப்பாற்றாது என்பதையும் அவர் புரிந்துவைத்திருப்பார் என தான் நம்புவதாகவும் தெரிவிக்கிறார் Maria Maksakova.

(Visited 31 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்