சிட்னியில் கத்திக்குத்து சம்பவம் :காவல் அதிகாரி உட்பட அறுவர் காயம்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிகழ்ந்த கார் விபத்து, கத்திக்குத்து சம்பவம் இரண்டிலும் பாதிக்கப்பட்ட அறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கார் விபத்தில் இருவர் காயமுற்றனர் என்றும் கத்திக்குத்தில் நால்வர் காயமுற்றனர் என்றும் ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 25) தெரிவிக்கப்பட்டது. கத்திக்குத்தில் காயமடைந்தோரில் சந்தேக நபர், காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு வழிப்போக்கர் ஆகியோர் அடங்குவர்.இச்சம்பவம் எங்கடீன் குடியிருப்பு வட்டாரத்தில் நிகழ்ந்தது என்று காவல்துறைப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
காரில் 48 வயது பெண் ஒருவரை அவரின் காதலர் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறையினர் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்குத் தகவல் அளித்தனர். தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 58 வயது நபர், காவல்துறையினருக்குத் தெரிந்தவர்.
அந்த நபர் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது அவர் அப்பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது என்று news.com.au ஊடகம் தெரிவித்தது.அவ்வழியே சென்ற பெண் ஒருவரும், காரில் இருந்த பெண்ணுக்கு உதவ முயன்றபோது வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்று ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது. அந்தப் பெண் கவலைக்கிடமாக இருக்கிறார், அதேவேளை, சீராகவும் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
சந்தேக நபர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டதால் கத்திக்குத்துக் காயங்களுக்கு ஆளானதாகவும் ஏபிசி தெரிவித்தது. அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் அது குறிப்பிட்டது.சந்தேக நபரைக் கைதுசெய்தபோது காவல்துறை அதிகாரி ஒருவரின் கையில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டது. அவர் கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக இருக்கிறார்.
சாலை விபத்துக்கு முன்பு சந்தேக நபர் காரை சரியாக ஓட்டாததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர். அவர் கையில், அட்டைப் பெட்டிகளை வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தி இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சி செய்தார் என்றும் அவர் டேசர் சாதனத்தால் அடக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார் என்றும் காவல்துறை குறிப்பிட்டது.சிட்னி நகரில் இவ்வாறு பல கத்திக்குத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்