பிரித்தானியாவில் புலம் பெயர் தொழிலாளர்கள் பலர் கைது!
பிரித்தானியாவின் குடிவரவு அமலாக்க அதிகாரிகள் ஒரு வார கால சோதனை நடவடிக்கைகயின் ஒரு பகுதியாக 75 சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த வாரத்தில் அதிகாரிகள் 225க்கும் மேற்பட்ட வணிகங்களை பார்வையிட்டனர். இதன்போது சட்டவிரோதமாக 122 தொழிலாளர்களை பணியமர்த்தியமைக்காக சிவில் அபராதம் பெற்றுள்ளனர் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்துறைச் செயலர் யவெட் கூப்பர் கூறுகையில், “மக்களின் உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோதமான முறையில் அவர்களை இங்கு அழைத்து வந்து, வேலைவாய்ப்பில் தள்ளும் கடத்தல் கும்பலுடன் கைகோர்த்து வேலை செய்வது முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் உறுதியாக உள்ளோம், அதனால்தான் இதுபோன்ற சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், விதிகளை மீறுபவர்கள் சட்டத்தின் முழு வலிமையையும் எதிர்கொள்வதை நாங்கள் உறுதி செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.