ஆஸ்திரேலியாவில் அமுலுக்கு புதிய நடவடிக்கை!
ஆஸ்திரேலியாவில் மின்-சிகரெட் புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் எடுக்க்படபவுள்ளது.
சுகாதார அமைச்சர் Mark Butler இதனை அறிவித்திருக்கிறார்.
புகையிலை நிறுவனங்கள் வேண்டுமென்றே இளையர்களை நிக்கொட்டீனுக்கு அடிமையாக்குவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒருமுறை பயன்படுத்தும் மின்-சிகரெட்களும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பரிந்துரைக்கப்படாத மின்-சிகரெட்களும் இனி ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்படும்.
மின்-சிகரெட்களில் நிக்கொட்டின் அளவும் கட்டுப்படுத்தப்படும். ஆஸ்திரேலியாவில் பத்தாண்டுகளில் புகைப்பிடிப்புக்கு எதிரான மிகப்பெரிய சீர்த்திருத்தமாக அந்த நடவடிக்கைகள் கருதப்படுகின்றன.
அண்மைக் காலங்களில் இளையர்களுக்கிடையே மின்-சிகரெட்டுகளைப் புகைக்கும் போக்கைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா சிரமப்படுகிறது.
உயர்நிலைப் பள்ளிகளில் பயில்வோர் மின்-சிகரெட் புகைப்பது அவர்களின் பழக்க வழக்கங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கநிலைப் பாடசாலைகளிலும் அத்தகைய போக்குப் பரவலாகக் காணப்படுவதாகச் சுகாதார அமைச்சர் கூறினார்.