மத்திய பிரதேசத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மாவட்டத் தலைமையகத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மோவ் தாசில்தார் சோரல் கிராமத்தில் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இந்தூர் (கிராமப்புற) காவல் கண்காணிப்பாளர் ஹித்திகா வாசல், சம்பவ இடத்திலிருந்து தொலைபேசியில் தெரிவித்தார்.
“ஐந்து உடல்கள் மீட்கப்பட்டதன் மூலம் தேடுதல் பணி முடிவடைந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.
(Visited 32 times, 1 visits today)





