குடிநீரில் 2 மடங்கு புளோரைடு – அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
அமெரிக்காவில் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவைப் போல் இரண்டு மடங்கு fluoride இருந்தால் அது பிள்ளைகளின் அறிவுத்திறனைப் பாதிக்கக்கூடும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Fluoride அதிகம் இருப்பதையும் பிள்ளைகளின் அறிவுத்திறனையும் தொடர்புபடுத்தி அமெரிக்க அரசாங்க அமைப்பு வெளியிட்டுள்ள முதல் அறிக்கை இதுவாகும்.
Fluoride பற்களை உறுதியாக்குகிறது, பற்களில் ஏற்படும் கறையை அகற்ற உதவுகிறது என்று அமெரிக்கத் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் கூறுகிறது.
குடிநீரில் குறிப்பிட்ட அளவு Fluoride கலக்கப்படுவது சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய பொதுச் சுகாதாரச் சாதனையாகக் கொண்டாடப்பட்டது.
Fluoride பற்றிய புதிய ஆய்வறிக்கை அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பைப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய ஆவணம் என்று Florida பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஆஷ்லீ மாலின் கூறினார்.
கனடா, சீனா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான், மெக்சிகோ ஆகிய நாடுகளில் குடிநீரில் நடத்தப்பட்ட ஆய்வை ஒட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.