ஷேக் ஹசீனாவின் இராஜதந்திர பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வங்காளதேச இடைக்கால அரசு திட்டம்
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவின் இராஜதந்திர கடவுச்சீட்டை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவின் ஆவணங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கை, முன்னாள் எதேச்சதிகார தலைவரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷேக் ஹசீனா வெளியேற்றப்படுவதற்கு முந்தைய வாரங்களில் 450க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், டாக்காவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை மக்கள் கூட்டங்கள் முற்றுகையிட்டு அவரது இரும்புக்கரம் கொண்ட 15 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டியது.
இந்த கடவுச்சீட்டு ரத்து திட்டமானது ஷேக் ஹசீனாவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.
இந்த நபர்கள் இனி உத்தியோகபூர்வ பதவிகளை வகிக்காததால், பொதுவாக “சிவப்பு பாஸ்போர்ட்” என்று அழைக்கப்படும் இராஜதந்திர பாஸ்போர்ட் ரத்து திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உள்துறை அமைச்சகம் குடிவரவு மற்றும் கடவுச்சீட்டு திணைக்களத்திற்கு இது தொடர்பாக வாய்மொழி அறிவுறுத்தல்களை மட்டுமே வழங்கியுள்ளதாகவும், இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.