அந்தரங்க இடத்தில் கடித்த 12 அடி நீள பாம்பு… தாய்லாந்தில் டாய்லெட் போன நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி !!
தாய்லாந்து நாட்டில் ரொம்பவே வினோதமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கே டாய்லெட் போன ஒரு நபரை ஆணுறுப்பில் பாம்பு ஒன்று கடித்துள்ளது. கழிப்பறை போன அவர் இதனால் அலறி துடித்துக் கத்தி இருக்கிறார்.
தாய்லாந்து சேர்ந்த தனத் தங்க்தேவானன் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம் போல பாத்ரூம் சென்றுள்ளார். அப்போது திடீரென அவரது ஆணுறுப்பில் மிகக் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.. அப்போது கீழே பார்த்த போது தான் 12 அடி மலைப்பாம்பு ஒன்று அவரது ஆணுறுப்பைக் கவ்விக் கொண்டு இருந்துள்ளது. இதைப் பார்த்து அவர் மிரண்டு போய்விட்டார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில், “கழிப்பறை உபயோகித்துக் கொண்டு இருந்த போது எனது ஆணுறுப்பை ஏதோ ஒன்று கடிப்பதை உணர்ந்தேன். வலியைத் தாங்கவே முடியவில்லை. என்ன நடந்தது என கீழே பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. பாம்பு அப்படியே எனது ஆணுறுப்பைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருந்தது.
நான் பாம்பைப் பிடித்து இழுத்தேன். ஆனால், அது எனது ஆணுறுப்பை விடவே இல்லை. கெட்டியாகக் கடித்துக் கொண்டு இருந்தது. விடவே இல்லை. அப்போது எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அருகே இருந்த டாய்லெட் பிரஷை எடுத்து பாம்பை அடிக்க தொடங்கிவிட்டேன். தொடர்ந்து அதன் தலையில் அடித்துக் கொண்டே இருந்தேன்.
சில நொடிகளுக்குப் பின்னர் அது எனது ஆணுறுப்பை விட்டது. உடனடியாக டாய்லெட்டில் இருந்து பாம்பை வெளியே எடுத்துப் போட்டேன். என்னால் வலி தாங்கவே முடியவில்லை. வாழ்நாளில் அப்படியொரு வலியை அனுபவித்ததே இல்லை. அங்கே டாய்லெட் முழுக்க ரத்தம் தெறித்தது.
அப்போதும் டாய்லெட்டிற்குள் பாம்பு வந்து ஆணுறுப்பைக் கடித்ததை நம்பவே முடியவில்லை. அப்போது அந்த மலைப்பாம்பு எனது விரலையும் கடித்தது” என்று பதிவிட்டுள்ளார்.
தாய்லாந்தின் சமுத் பிரகான் மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. டாங்டெவானான் அந்த டாய்லெட் பிரஷை வைத்தே மலைப்பாம்பை அடித்துக் கொன்றுவிட்டார். அதன் பிறகே அவர் செக்யூரிட்டியை கூப்பிட்டுள்ளார். அவர்கள் அந்த பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்த போட்டோ வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து டாங்டெவானானை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நல்வாய்ப்பாக இவரைக் கடித்த பாம்பு விஷ பாம்பு இல்லை. மலைப்பாம்பு தான் கடித்துள்ளது. மேலும், தையல் போட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. தடுப்பூசி மட்டும் போடப்பட்டு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்.