இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை : மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிய மலையேறிகள்!
இந்தோனேசியாவில் ஹல்மஹேரா தீவின் வடக்கு முனையில் அமைந்துள்ள ஒரு செயலில் உள்ள எரிமலையான டுகோனோ வெடித்து சிதறியுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சிலர் மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிய எரிமலை வெடிப்பினால் 8,000 அடி உயரத்திற்கு சாம்பல்கள் உருவாகி அப்பகுதியே புகைமண்டலமாக காட்சி தருவதை காணொளிகள் வெளிப்படுத்தியுள்ளன.
குறித்த எரிமலையானது 1719, 1868 மற்றும் 1901 ஆகிய காலப்பகுதிகளில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 28 times, 1 visits today)





