ஆகஸ்ட் 23 உக்ரைன் செல்லும் இந்திய பிரதமர் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கீவ் விஜயத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக, உக்ரைனில் நிலவும் மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண்பதில் பங்களிக்கத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் தலைநகர் சென்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
உக்ரைனில் உள்ள மோதலைத் தீர்க்க இந்தியா எப்போதும் இராஜதந்திரம் மற்றும் உரையாடலைப் பரிந்துரைக்கிறது என்று வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செயலாளர் (மேற்கு) தன்மயா லால் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
சந்திப்பில் உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் விவாதத்தின் ஒரு பகுதியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா சுதந்திரமான உறவைக் கொண்டுள்ளது என்று தன்மயா லால் தெரிவித்தார்.
(Visited 5 times, 1 visits today)