போதைப்பொருள் கலந்த மிட்டாய்களை வழங்கியதற்காக மன்னிப்பு கேட்ட நியூசிலாந்து தொண்டு நிறுவனம்
நியூசிலாந்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ‘ஆக்லாந்து சிட்டி மிஷன்’ அன்னாசிப்பழ சுவைக்கொண்ட மிட்டாய்களை அந்நாட்டில் உணவு வாங்குவதற்குப் பணம் இல்லாமல் சிரமப்படும் மக்களுக்கு விநியோகம் செய்தது.
அந்த மிட்டாய்களில் ‘மெத்தாம்பேட்டமைன்’ எனும் போதைப்பொருள் கலந்திருந்ததாக கண்டறியப்பட்டதை அடுத்து, அதை விநியோகம் செய்ததற்காக அந்தத் தொண்டு நிறுவனம் புதன்கிழமையன்று மன்னிப்பு கேட்டுகொண்டது.
அந்த மிட்டாய்கள் அடங்கிய பொட்டலங்களைப் பெற்ற சிலர், அது குறித்து ஆகஸ்ட் 13ஆம் திகதி பிற்பகல் வேளையில் புகார் அளித்தனர். அதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அதில் குறிப்பிட்ட அளவை மீறி ‘மெத்தாம்பேட்டமைன்’ எனும் போதைப்பொருள் கலந்திருப்பது தெரிய வந்தது என அந்தத் தொண்டு நிறுவனம் தெரிவித்தது.
(Visited 9 times, 1 visits today)