பாரீஸ் ஒலிம்பிக் – எகிப்து மல்யுத்த வீரர் கைது

பாரீஸ் ஒலிம்பிக் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் 11ந் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற எகிப்திய மல்யுத்த வீரரை பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
26 வயதான முகமது எல்சைட், மதுபோதையில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரை போலீசார் கைது செய்துள்ளதாக பாரீஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீரர் விடுவிக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை.
(Visited 24 times, 1 visits today)